< Back
தேசிய செய்திகள்
ஜம்முவில் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் டிரோன்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

ஜம்முவில் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் டிரோன்

தினத்தந்தி
|
14 April 2023 1:54 AM IST

ஜம்முவில் ரூ.2 லட்சம் மற்றும் 131 தோட்டாக்களை சுமந்து வந்த பாகிஸ்தான் டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது.

ரஜவுரி,

ஜம்மு காஷ்மீரின் ரஜவுரி மாவட்டம் பெரி பட்டன் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டைத் தாண்டி, பாகிஸ்தானுக்குள் இருந்து டிரோன் பறந்து வருவதை ராணுவ படையினர் கண்டனர். நேற்று முன்தினம் இரவு இந்த ஊடுருவல் முயற்சி அறியப்பட்டதும், ராணுவ வீரர்கள் டிரோனை சுட்டு வீழ்த்தும் முயற்சியில் இறங்கினர்.

இறுதியில் அந்த டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது. டிரோன் விழுந்த இடத்தை தேடிப்பிடித்தபோது டிரோனில் ரூ.2 லட்சம் பணம் மற்றும் 5 தோட்டா குப்பிகள் மற்றும் 131 தோட்டாக்கள் இணைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.

இதையடுத்து இதுபோல வேறு டிரோன்கள் மூலமாக ஆயுதங்கள் அனுப்பப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு பகுதிகளில் ஆயுதங்கள், பணம் மற்றும் போதைப்பொருட்களை கடத்தும் டிரோன்கள் பாதுகாப்பு படையினருக்கு பெரும் சவாலாக மாறி உள்ளது.

மேலும் செய்திகள்