< Back
தேசிய செய்திகள்
பஞ்சாப் எல்லையில் சுற்றித் திரிந்த பாகிஸ்தான் ட்ரோன் விமானம்
தேசிய செய்திகள்

பஞ்சாப் எல்லையில் சுற்றித் திரிந்த பாகிஸ்தான் ட்ரோன் விமானம்

தினத்தந்தி
|
27 Sept 2022 3:04 PM IST

பாகிஸ்தானைச் சேர்ந்த ட்ரோன் விமானம் மீது 56 சுற்றுகள் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் பகுதியில் பாகிஸ்தானுக்கு சொந்தமான ட்ரோன் விமானம் சுற்றி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் தெரிவித்த எல்லை பாதுகாப்பு படை, சந்தேகத்திற்கிடமான வகையில் பாகிஸ்தான் ட்ரோன் விமானம் ஒன்று சுமார் 15 நிமிடங்கள் சுற்றி வந்ததாக தெரிவித்துள்ளது.

அந்த ட்ரோன் விமானம் மீது 56 சுற்றுகள் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும், அந்த ட்ரோன் விமானம் திசை திருப்பி விடப்பட்டதாகவும் எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. இதையடுத்து குர்தாஸ்பூர் எல்லை பகுதிகளில் தற்போது பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகள்