< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
இந்திய எல்லைக்கு வழி தவறி வந்த பாகிஸ்தான் சிறுவன் - திருப்பி ஒப்படைப்பு
|2 July 2022 10:29 PM IST
பாகிஸ்தானை சேர்ந்த 3 வயது சிறுவன் வழி தவறி சர்வதேச எல்லைக்கு வந்தது தெரிய வந்தது.
சண்டிகர்,
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையான பெரோஸ்பூர் செக்டார் பகுதியில் சிறுவன் ஒருவன் அழுது கொண்டிருந்தான். இதை பார்த்த இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் அச்சிறுவனை மீட்டனர்.
பாகிஸ்தானை சேர்ந்த 3 வயது சிறுவனான அவன் வழி தவறி சர்வதேச எல்லைக்கு வந்தது தெரிந்தது. இதுகுறித்து இந்திய பாதுகாப்பு படையினர் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அந்த சிறுவன் அவனது தந்தை மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.