< Back
உலக செய்திகள்
இம்ரான் கானை கைது செய்து ஆஜர்படுத்துங்கள் - போலீசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

Image Courtacy: PTI

உலக செய்திகள்

இம்ரான் கானை கைது செய்து ஆஜர்படுத்துங்கள் - போலீசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

தினத்தந்தி
|
25 July 2023 1:39 AM IST

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்து ஆஜர்படுத்துங்கள் என்று போலீசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தை அவதூறாக பேசியதாக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் தேர்தல் ஆணையத்தின் முன்பு இம்ரான் கான் ஆஜராகவில்லை.

இந்நிலையில் இம்ரான் கானை கைது செய்து தேர்தல் ஆணையத்தின் முன் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆஜர்படுத்துமாறு இஸ்லாமாபாத் போலீஸ் ஐ.ஜி.க்கு தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்