< Back
தேசிய செய்திகள்
காஷ்மீரில் நடைபெறும் ஜி-20 மாநாட்டை சீர்குலைக்க பாகிஸ்தான் ராணுவம் சதி - உளவுத்துறை எச்சரிக்கை
தேசிய செய்திகள்

காஷ்மீரில் நடைபெறும் ஜி-20 மாநாட்டை சீர்குலைக்க பாகிஸ்தான் ராணுவம் சதி - உளவுத்துறை எச்சரிக்கை

தினத்தந்தி
|
12 May 2023 5:42 PM IST

பாகிஸ்தான் ராணுவத்தின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணித்து வருவதாக பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.

ஸ்ரீநகர்,

இந்தியா-பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாடுக் கோட்டின் அருகே பாகிஸ்தான் ராணுவம் அதிக அளவிலான பயங்கரவாதிகளை குவித்து வைத்திருப்பதாக இந்திய பாதுகாப்புப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையின்படி, நீலம் பள்ளத்தாக்கு, லீபா பள்ளத்தாக்கு மற்றும் ஜீலம் பள்ளத்தாக்கு பகுதிகள் வழியாக பல்வேறு குழுக்களாக ஊடுருவ பயங்கரவாதிகள் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் வரும் 23, 24-ந்தேதிகளில் நடைபெற உள்ள ஜி-20 கூட்டத்தை சீர்குலைப்பதற்காக பயங்கரவாதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புப்படை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே சமயம் இந்திய பாதுகாப்புப் படையினர் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பயங்கரவாதிகளின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்