< Back
தேசிய செய்திகள்
வாகா எல்லையில் பாக். வீரர்களுடன் இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய ராணுவ வீரர்கள்
தேசிய செய்திகள்

வாகா எல்லையில் பாக். வீரர்களுடன் இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய ராணுவ வீரர்கள்

தினத்தந்தி
|
14 Aug 2022 5:31 PM IST

75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அட்டாரி - வாகா எல்லையில் பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர்.

பஞ்சாப்,

நாடு முழுவதும் நாளை 75வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடுவருகிறது. இதனால் நாடே விழாக்கோலம் பூண்டுள்ளது. மாநிலங்களின் முக்கிய அலுவலகங்கள், தலைநகரங்களில் தேசியக் கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பஞ்சாப்பில் உள்ள அட்டாரி - வாகா எல்லையில் அண்டை நாடான பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் இனிப்புகளை பரிமாறி கொண்டனர். ஒருவருக்கு ஒருவர் கை குலுக்கி இன்முகத்துடன் வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.

மேலும் செய்திகள்