போதைப்பொருளுடன் பறந்து வந்த பாகிஸ்தான் டிரோனை சுட்டு வீழ்த்திய வீராங்கனைகள்..!!
|போதைப்பொருளுடன் பறந்து வந்த பாகிஸ்தான் டிரோனை வீராங்கனைகள் சுட்டு வீழ்த்தினர்
அமிர்தசரஸ்,
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகருக்கு அருகே இந்தியா-பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள சாஹர்பூர் கிராமத்தில் எல்லை பாதுகாப்பு படை வீராங்கனைகள் வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பாகிஸ்தானில் இருந்து ஒரு டிரோன், இந்திய பகுதிக்குள் நுழைவதை வீராங்கனைகள் பார்த்தனர். உடனே 2 வீராங்கனைகள், டிரோன் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். 25 ரவுண்டு சுட்ட பிறகு டிரோன் கீழே விழுந்தது. அருகே சென்று பார்த்தபோது, டிரோன் சேதம் அடைந்து காணப்பட்டது. அதன் எடை 18 கிலோ இருக்கும். டிரோனில், 3.11 கிலோ எடையுள்ள போதைப்பொருள் ஒரு பாலித்தீன் பையில் சுற்றி வைக்கப்பட்டு இருந்தது. அதை எல்லை பாதுகாப்பு படை கைப்பற்றியது. இதன்மூலம், இந்தியாவுக்குள் போதைப்பொருள் கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டது.
பஞ்சாப்பில் வடை சீமா எல்லைப்புற காவல் நிலையம் அருகே மற்றொரு டிரோன் பறந்து வந்தது. எல்லை பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுடத் தொடங்கியவுடன் பாகிஸ்தானுக்கு திரும்பிச் சென்றது.