< Back
தேசிய செய்திகள்
பஞ்சாப் எல்லையில் போதைப் பொருளுடன் வந்த பாக். டிரோனை சுட்டு வீழ்த்திய பாதுகாப்புப்படையினர்
தேசிய செய்திகள்

பஞ்சாப் எல்லையில் போதைப் பொருளுடன் வந்த பாக். டிரோனை சுட்டு வீழ்த்திய பாதுகாப்புப்படையினர்

தினத்தந்தி
|
21 May 2023 8:50 AM IST

பஞ்சாப் எல்லைக்கு அருகே போதைப் பொருள்களை ஏற்றிச் சென்ற பாகிஸ்தான் டிரோன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

அமிர்தசரஸ்,

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே இந்தியா- பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கு அருகே போதைப் பொருள்களை கொண்டுவந்த பாகிஸ்தானின் ஆளில்லா டிரோன் விமானத்தை எல்லைப் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.

அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள தானோ கலான் கிராமத்தில் நேற்று இரவு இந்த சம்பவம் நடைபெற்றதாக எல்லை பாதுகாப்பு படை ஒரு அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோன் விமானத்தை எல்லை பாதுகாப்பு படையினர் ஆய்வு செய்ததில், அதில் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. போதைப்பொருளின் மொத்த எடை 3.3 கிலோ அளவில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்