< Back
தேசிய செய்திகள்
ஆயுதங்களால் தாக்கி பெயிண்டர் கொலை
தேசிய செய்திகள்

ஆயுதங்களால் தாக்கி பெயிண்டர் கொலை

தினத்தந்தி
|
26 Jun 2022 4:36 AM IST

கலபுரகி அருகே ஆயுதங்களால் தாக்கி பெயிண்டரை மர்மநபர்கள் கொலை செய்தனர்.

கலபுரகி:

கலபுரகி மாவட்டம் ஆலந்தா தாலுகா சுக்ரவாடி கிராமத்தை சேர்ந்தவர் தயானந்த்(வயது 28). இவர் துபாயில் பெயிண்டராக வேலை செய்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தயானந்த் சொந்த ஊருக்கு வந்து இருந்தார். அடுத்த வாரம் தயானந்த் மீண்டும் துபாய் செல்ல இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கலபுரகிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற தயானந்த் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நேற்று காலை கலபுரகி புறநகர் பகுதியில் உள்ள நிலத்தில் ரத்தவெள்ளத்தில் தயானந்த் இறந்து கிடந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் தயானந்தை மர்மநபர்கள் ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. ஆனால் அவரை கொலை செய்தது யார்? என்ன காரணத்திற்காக கொலை நடந்தது? என்பது உடனடியாக தெரியவில்லை. தயானந்தின் சித்தப்பாவுக்கு சொந்தமான நிலத்தை சுக்ரவாடி கிராமத்தை சேர்ந்த சகோதரர்களான அனில், சுனில் ஆகியோர் அபகரிக்க முயன்று உள்ளனர். இதனை தயானந்த் கண்டித்து உள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் தயானந்தை சுனில், அனில் ஆகியோர் தீர்த்துக்கட்டி இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இந்த கொலை சம்பவம் குறித்து பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

மேலும் செய்திகள்