< Back
தேசிய செய்திகள்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் படி பூஜை தொடக்கம் - திரளான பக்தர்கள் தரிசனம்
தேசிய செய்திகள்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் படி பூஜை தொடக்கம் - திரளான பக்தர்கள் தரிசனம்

தினத்தந்தி
|
17 Jan 2023 10:07 PM IST

சபரிமலை அய்யப்பன் கோவிலில் படி பூஜை தொடங்கியது.

சபரிமலை,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல விளக்கு மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக கடந்த நவம்பர் 16-ந்தேதி நடை திறக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, இருமுடி கட்டி சபரிமலைக்கு வந்து அய்யப்பனை தரிசனம் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 27-ந்தேதி மண்டல விளக்கு பூஜையும், கடந்த 14-ந்தேதி மகர விளக்கு பூஜையும் வெகு விமரிசையாக நடைபெற்றன. மகர விளக்கு பூஜையில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு மகரஜோதியை தரிசனம் செய்து வழிபட்டனர்.

இந்த நிலையில் சபரிமலை அய்யப்பன் கோவிலில் படி பூஜை தொடங்கியது. வரும் 19-ந்தேதி வரை நடைபெறும் படி பூஜையில் சிறப்பு கலாபிஷேகம் நாளை நடைபெறுகிறது. நாளை மறுநாள் மாளிகைபுறத்தம்மன் கோவிலில் குருதி பூஜை நடைபெற உள்ள நிலையில், அன்றைய தினம் இரவு 9 மணி வரை மட்டும் சபரிமலையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்