< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மராட்டியத்தில் 6 தொகுதிகளில் போட்டியிட ஓவைசி கட்சி திட்டம்
|11 March 2024 9:59 PM IST
நாடாளுமன்ற தேர்தலில் மராட்டியத்தில் 6 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டு உள்ளோம் என்று ஓவைசி கூறியுள்ளார்.
மும்பை,
நாடாளுமன்ற தேர்தலில் மராட்டியத்தில் 6 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டு உள்ளதாக அசாதுதீன் ஓவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி எம்.பி. இம்தீயாஸ் ஜலில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
நாடாளுமன்ற தேர்தலில் மராட்டியத்தில் 6 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டு உள்ளோம். நான் எந்த தொகுதியில் போட்டியிடுவேன் என்பது குறித்தும் ஒரிரு நாளில் தெரிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.