< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஆப்பிரிக்க நாட்டில் பயங்கரம்: பயங்கரவாத தாக்குதலில் 70 ராணுவ வீரர்கள் பலி
|27 Feb 2023 12:55 AM IST
ஆப்பிரிக்க நாட்டில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 70 ராணுவ வீரர்கள் பலியாகினர்.
ஓவாகடூகோ,
மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினோ பாசோவில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
இந்த நிலையில் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ஒடலன் மாகாணம் டியோ நகரில் ராணுவ வீரர்கள் வாகனங்களில் அணிவகுத்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரர்கள் வாகனங்கள் மீது துப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வீசியும் சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.
இந்த கொடூர தாக்குதலில் 70 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.