< Back
தேசிய செய்திகள்
இதுவரை 6 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல்: இன்று கடைசி நாள்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

இதுவரை 6 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல்: இன்று கடைசி நாள்

தினத்தந்தி
|
31 July 2023 12:15 AM IST

வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்ய இன்று (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும்.

புதுடெல்லி,

2022-2023 நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்ய இன்று (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும்.

இதுவரை 6 கோடிக்கு மேற்பட்ட வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. அவற்றில், நேற்று ஒரே நாளில் மாலை 6.30 மணிவரை 26 லட்சத்து 76 ஆயிரம் வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

கடந்த ஆண்டு ஜூலை 31-ந் தேதி வரை தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்குகள் எண்ணிக்கை, இந்த ஆண்டு ஏற்கனவே முறியடிக்கப்பட்டு விட்டது. கணக்கு தாக்கல், வரி செலுத்துதல் உள்ளிட்ட சேவைகளில் வரி செலுத்துவோருக்கு உதவ வருமான வரி உதவி மையம் 24 மணி நேரமும் இயங்கி வருவதாக வருமான வரித்துறை கூறியுள்ளது.

மேலும் செய்திகள்