27 ஆண்களை மணந்து முதல் இரவில் கொள்ளையடித்த பெண்...!
|கல்யாணம் ஆகாத இளைஞர்களை தேடி அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பது புரோக்கரின் வேலை.
ஸ்ரீநகர்
27 க்கும் மேற்பட்ட இளைஞர்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண். ஆம், நம்புவதற்கு கடினமாகத் தோன்றினாலும் அது உண்மைதான். 12க்கும் மேற்பட்ட ஆண்கள் தங்கள் மனைவியைக் காணவில்லை என்று புகார் கொடுக்க போலீஸ் நிலையத்திற்கு வந்தபோது இந்த சம்பவமே வெளிச்சத்திற்கு வந்தது.
அனைவரின் மனைவியின் போட்டோவை போலீசார் சோதனை செய்த போது அது ஒரே பெண் தான் என்பதை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த பெண்ணின் உண்மையான பெயர் யாருக்கும் தெரியாது,ஜம்மு காஷ்மீர் புட்காம் மாவட்டத்தில் மட்டும் 27 ஆண்களை புரோக்கர்களின் உதவியுடன் திருமணம் செய்துள்ளார்.
இந்த மணப்பெண்கள் தனியாக கொள்ளையை நடத்துவதில்லை. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அதனுடன் பெரிய கும்பலே ஈடுபடுகின்றன. இதில் புரோக்கரின் பங்கு மிகப் பெரியது. பல சமயங்களில், மணப்பெண்ணின் காதலன் அல்லது கணவனும் இதில் ஈடுபடுகின்றனர்.
கல்யாணம் ஆகாத இளைஞர்களை தேடி அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பது புரோக்கரின் வேலை. இதற்காகவும் மணமகன் வீட்டில் இருந்து பெரும் தொகையை புரோக்கர் வாங்கி கொள்கிறார். இதற்குப் பிறகு போலியான ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்கப்படுகிறது. சில நாட்கள், மாதங்கள் அல்லது வாய்ப்பு கிடைத்தவுடன், மணப்பெண் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் பணத்துடன் வீட்டை விட்டு தப்பி ஓடுகிறார்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள ரஜோரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் காஷ்மீரைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட ஆண்களை ஏமாற்றி, ஒவ்வொரு முறையும் திருமணம் செய்துகொண்ட பிறகு நகை பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்று உள்ளார்.