கடந்த ஓராண்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஆயிரத்து 500 தனியார் மருத்துவமனைகள் இணைப்பு - மன்சுக் மாண்டவியா
|ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் கடந்த ஓராண்டில் ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன என்று மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் கடந்த ஓராண்டில் ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா, ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஒவ்வொரு மாதமும் மதிப்பாய்வு செய்யப்படுகிறது. மேலும், இந்த திட்டத்தின் கீழ் நோயாளிகளின் செலவு குறைந்துள்ளது.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் சுமார் 4.5 கோடி ஏழைகள் காப்பீடு செய்துள்ளனர். இதன்மூலம் அவர்கள் ரூ. 5 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் எந்தவொரு தனியார் மருத்துவமனையும் இணைந்து கொள்ளலாம்.
தினந்தோறும் 7 முதல் 8 லட்சம் பயனாளி கார்டுகள் அச்சிடப்படுகிறது. அடுத்த 4 அல்லது 6 மாதங்களில் 50 கோடி கார்டுகள் கிடைப்பதை உறுதி செய்ய அமைச்சகம் செயல்பட்டு வருகிறது.
கடந்த ஓராண்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 22 ஆயிரம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.