< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கேரளாவில் பள்ளி சுற்றுலா சென்ற 3 மாணவர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு
|3 March 2023 4:50 PM IST
கேரளாவின் இடுக்கியில் பள்ளி சுற்றுலா சென்ற 3 மாணவர்கள் மாங்குளம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இடுக்கி,
கேரள மாநிலம் இடுக்கியில் பள்ளி சுற்றுலா சென்ற 15 வயது மாணவர்கள் 3 பேர் மாங்குளம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று பிற்பகல் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அங்கமாலியில் உள்ள ஜோதிஸ் சென்ட்ரல் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட 30 பேர் பள்ளி சுற்றுலாவுக்காக மாங்குளம் சென்றனர். இந்த நிலையில் ஆற்றில் ஆழம் குறைந்த பகுதியில் 5 மாணவர்கள் சிக்கினர்.
இதையடுத்து மற்ற மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு, வந்த அப்பகுதி மக்கள் விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். அவர்களில் இரண்டு மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். மேலும் 3 மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.