< Back
தேசிய செய்திகள்
ரத்தத்துக்கு பதிலாக சாத்துக்குடி ஜூஸ் ஏற்றிய தனியார் மருத்துவமனையை இடிக்க உத்தரவு
தேசிய செய்திகள்

ரத்தத்துக்கு பதிலாக சாத்துக்குடி ஜூஸ் ஏற்றிய தனியார் மருத்துவமனையை இடிக்க உத்தரவு

தினத்தந்தி
|
26 Oct 2022 4:20 PM IST

உத்தரப்பிரதேசத்தில் டெங்கு நோயாளிக்கு ரத்தம் ஏற்றுவதற்கு பதிலாக சாத்துக்குடி ஜூஸ் ஏற்றிய மருத்துவமனையை இடிக்க நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

லக்னோ,

உத்தரப்பிரதேசத்தில் டெங்கு நோயாளிக்கு ரத்தம் ஏற்றுவதற்கு பதிலாக சாத்துக்குடி ஜூஸ் ஏற்றிய மருத்துவமனையை இடிக்க நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

டெங்குவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரத்தத்தில் உள்ள பிளேட்லெட்கள் எண்ணிக்கை குறைவதன் காரணமாக, நோயாளிகளுக்கு ரத்தம் மூலமாக பிளேட்லெட்கள் ஏற்றப்படும். இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு சாத்துக்குடி ஜூஸ் ஏற்றப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் அந்த நோயாளி உயிரிழந்ததையடுத்து, மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் அனைவரும் அங்கிருந்து மாற்றப்பட்டு மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும், இது தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது அந்த மருத்துவமனைக்கு அனுமதியின்றி கட்டிடம் கட்டியதற்காக, கட்டடத்தை இடிப்பதற்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

வருகிற வெள்ளிக்கிழமைக்குள் மருத்துவமனையை முற்றிலும் காலி செய்யவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்