< Back
தேசிய செய்திகள்
கடலோர மாவட்டங்களில் 4 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; வானிலை ஆய்வு மையம் தகவல்
தேசிய செய்திகள்

கடலோர மாவட்டங்களில் 4 நாட்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்'; வானிலை ஆய்வு மையம் தகவல்

தினத்தந்தி
|
2 July 2022 9:11 PM IST

கடலோர மாவட்டங்களில் கனமழை விட்டு, விட்டு பெய்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த 4 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ‘ஆரஞ்சு அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.

மங்களூரு;

4 நாட்களுக்கு கனமழை

கர்நாடகத்தில் கடந்த மாதம் (ஜூன்) தென்மேற்கு பருவமழை தொடங்கப்பட்டாலும் இதுவரை பெரிய அளவில் மழை பெய்யவில்லை. இந்த நிலையில் கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா ஆகிய பகுதிகளில் கடந்த சில தினங்களாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், கடலோர மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு அதாவது வருகிற 7-ந்தேதி வரை அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

'ஆரஞ்சு அலர்ட்'

கர்நாடக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா ஆகிய பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை இன்னும் வேகமெடுக்கவில்லை.

கடலோர மாவட்டங்களை பொறுத்தவரை அடுத்த 4 நாட்களுக்கு, அதாவது வருகிற 7-ந்தேதி வரை அதிக கனமழை பெய்யும். இதற்காக அந்த மாவட்டங்களுக்கு 4 நாட்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களில் 12 சென்டி மீட்டர் முதல் 20 சென்டி மீட்டர் வரை கனமழை பெய்யக்கூடும்.

மேலும் அரபிக்கடலில் காற்றின் வேகமும் அதிகமாக இருக்கும். இதனால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்