< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
நாடாளுமன்ற அலுவல்களில் இன்று கருப்பு உடையில் பங்கேற்க எதிர்க்கட்சிகள் முடிவு
|27 July 2023 5:15 AM IST
மணிப்பூர் விவகாரத்தை எதிர்த்து நாடாளுமன்ற அலுவல்களில் இன்று கருப்பு உடையில் பங்கேற்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த பிரச்சினையில் விவாதத்தை அனுமதிக்காதது, நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது விவாதத்தை தொடங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (வியாழக்கிழமை) கருப்பு உடை அணிந்து கூட்டத்தொடரில் பங்கேற்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
இது தொடர்பாக 'இந்தியா' கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள், தங்கள் கட்சி எம்.பி.க்களுக்கு அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.
முன்னதாக எதிர்க்கட்சித்தலைவரின் அறையில் நேற்று காலையில் நடந்த இந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தெரிவித்தனர்.