< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டம்
|15 Dec 2023 11:00 AM IST
நாடாளுமன்றத்தில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எம்.பிக்கள் இடை நீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு, பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இடை நீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குளறுபடியை எதிர்த்து அமளியில் ஈடுபட்டதாக, நேற்று கனிமொழி, ஜோதிமணி, சு.வெங்கடேசன் உள்ளிட்ட 14 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப் பட்டனர். இவர்கள் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.