< Back
தேசிய செய்திகள்
அமலாக்க துறை செயல்பாடு குறித்து விவாதிக்க வேண்டும் - எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தல்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

அமலாக்க துறை செயல்பாடு குறித்து விவாதிக்க வேண்டும் - எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
29 Oct 2022 1:11 AM IST

நாடாளுமன்ற நிதிக்குழுவில் அமலாக்க துறை செயல்பாடு குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர்.

புதுடெல்லி,

நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.

முன்னாள் மத்திய மந்திரியும், பா.ஜ.க. எம்.பி.யுமான ஜெயந்த் சின்கா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இந்திய போட்டி ஆணைய சட்டத்திருத்த மசோதா குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், நிலைக்குழுவின் இந்த ஆண்டுக்கான திட்டம் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

அப்போது ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சத்தா, அமலாக்க துறை செயல்படும்விதம் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் சில எதிர்க்கட்சி எம்.பி.க்களும் அவரது கருத்தை ஆமோதித்தனர்.

அரசியல் எதிராளிகளுக்கு எதிராக அமலாக்க துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை் மத்திய பா.ஜ.க. அரசு தவறாக பயன்படுத்திவருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்