< Back
தேசிய செய்திகள்
ஒடிசா சட்டசபையில் கவர்னர் உரையை புறக்கணித்து பா.ஜனதா, காங்கிரஸ் வெளிநடப்பு

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

ஒடிசா சட்டசபையில் கவர்னர் உரையை புறக்கணித்து பா.ஜனதா, காங்கிரஸ் வெளிநடப்பு

தினத்தந்தி
|
22 Feb 2023 1:38 AM IST

ஒடிசா சட்டசபையில் கவர்னர் உரையை புறக்கணித்து பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதாதளம் ஆட்சி நடந்து வருகிறது. நேற்று கவர்னர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பே, பா.ஜனதா உறுப்பினர்கள் ஒடிசா மந்திரி நபா கிஷோர் தாஸ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். கவர்னர் கணேஷி லால், உரையை வாசிக்க தொடங்கிய பிறகும் அமளியை தொடர்ந்தனர். அவர்களை பின்பற்றி, காங்கிரஸ் உறுப்பினர்களும் அதே பிரச்சினையை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

இருப்பினும், அதற்கு எந்த பலனும் கிைடக்காததால், கவர்னர் உரையை புறக்கணித்து, பா.ஜனதா உறுப்பினர்களும், காங்கிரஸ் உறுப்பினர்களும் ஒருவர்பின் ஒருவராக வெளிநடப்பு செய்தனர்.

மேலும் செய்திகள்