தேசிய கல்வி கொள்கையால் உள்ளூர் மொழியில் படிக்கும் வாய்ப்பு; பிரதமர் மோடி பேச்சு
|தேசிய கல்வி கொள்கையால், உள்ளூர் மொழிகளில் படிப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டு உள்ளன என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மைசூரு,
கர்நாடகாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி பெங்களூரு மற்றும் மைசூரு நகரங்களில் நடந்து வரும் நிகழ்ச்சிகளில் அடுத்தடுத்து பங்கேற்றார். அதில், பல திட்ட பணிகளையும், அடிக்கல் நாட்டு விழாவிலும் கலந்து கொண்டார்.
இதன் ஒரு பகுதியாக மைசூரு நகரில் சுட்டுரு மடத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று கலந்து கொண்டார். அதன்பின், கே.எஸ்.எஸ். சமஸ்கிருத பாடசாலை மற்றும் விடுதி கட்டிடம் ஆகியவற்றை தொடங்கி வைத்து, புத்தகங்களையும் அவர் வெளியிட்டார்.
இதன்பின் அவர் பேசும்போது, தேசிய கல்வி கொள்கையால், உள்ளூர் மொழிகளை படிப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த எளிமைப்படுத்துதலால், நம்முடைய புதிய தலைமுறைக்கு முன்னோக்கி செல்வதற்கான ஒரு வாய்ப்பு கிடைக்கும் என கூறியுள்ளார்.
கல்வி என்பது நமது நாட்டில் இயல்பிலேயே உடன்பிறந்த ஒன்றாக உள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.