< Back
தேசிய செய்திகள்
எதிர்க்கட்சிகளில் 2 டஜன் பிரதமர் வேட்பாளர்கள் பா.ஜ.க. கிண்டல்
தேசிய செய்திகள்

'எதிர்க்கட்சிகளில் 2 டஜன் பிரதமர் வேட்பாளர்கள்' பா.ஜ.க. கிண்டல்

தினத்தந்தி
|
14 Aug 2022 9:13 AM IST

பிரதமர் பதவி காலியாகாத நிலையில், எதிர்க்கட்சிகளில் 2 டஜன் பிரதமர் வேட்பாளர்களைக் கொண்ட காத்திருப்பு பட்டியல் தயார் நிலையில் உள்ளது என்று பாஜக கேலி செய்துள்ளது.

புதுடெல்லி,

நாடு இன்னும் 2 ஆண்டுகளில் அடுத்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலை சந்திக்கிறது. இந்த தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த தருணத்தில் உ.பி.யில் ராம்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான முக்தர் அப்பாஸ் நக்வி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், "பிரதமர் பதவி காலியாகாத நிலையில், எதிர்க்கட்சிகளில் 2 டஜன் பிரதமர் வேட்பாளர்களைக் கொண்ட காத்திருப்பு பட்டியல் தயார் நிலையில் உள்ளது" என கிண்டலடித்தார். மேலும், "மோடி போபியா என்கிற அரசியல் வியாதியால் பாதிக்கப்பட்டிருப்போர், விரைவில் மறைந்து போவார்கள்" எனவும் அவர் சாடினார்.

மேலும் செய்திகள்