< Back
தேசிய செய்திகள்
சவாலான சூழலிலும் மக்களுடன் நிற்போம் என்று காட்டியது - ஆபரேஷன் கங்கா திட்டம்: பிரதமர் மோடி பெருமிதம்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

'சவாலான சூழலிலும் மக்களுடன் நிற்போம் என்று காட்டியது' - ஆபரேஷன் கங்கா திட்டம்: பிரதமர் மோடி பெருமிதம்

தினத்தந்தி
|
18 Jun 2023 2:55 AM IST

சவாலான சூழலிலும் மக்களுடன் நிற்போம் என்று காட்டியதாக ஆபரேஷன் கங்கா திட்டம் குறித்து பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

புதுடெல்லி,

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதால் அங்கு சிக்கியிருந்த இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்டு இங்கே கொண்டு வந்து சேர்ப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இந்த நடவடிக்கை 'ஆபரேஷன் கங்கா' என அழைக்கப்பட்டது. இது தொடர்பாக ஒரு டி.வி. சானல் சார்பில் ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இன்று அந்த ஆவணப்படம் வெளியாவதையொட்டி, பிரதமர் மோடி டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அந்தப் பதிவில் அவர், " ஆபரேஷன் கங்கா, எவ்வளவு சவாலான சூழ்நிலை என்றாலும், நாங்கள் மக்களுடன்தான் நிற்போம் என்ற உறுதியான எங்கள் முடிவைக் காட்டுகிறது. இது இந்தியாவின் அசைக்க முடியாத உணர்வையும் பிரதிபலிக்கிறது. இந்த ஆவணப்படம், இந்த நடவடிக்கையுடன் தொடர்புடைய பல்வேறு அம்சங்கள் பற்றிய தகவல்களைக் கொண்டிருக்கும்" என்று கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்