< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பு; பக்தி பரவசத்துடன் ஏழுமலையானை தரிசித்த பக்தர்கள்!
|23 Dec 2023 6:10 AM IST
மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திருப்பதி,
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் வைணவ தளங்களில் இன்று சொர்க்கவாசல் திறப்பு கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பக்தர்களின் கோவிந்தா... ரங்கா... கோஷங்களுக்கிடையே அதிகாலை 4 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
அதேபோல், பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நள்ளிரவு 1.40 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.