< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கேரள மாநிலம் இடைமலையாறு அணை திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
|9 Aug 2022 4:35 PM IST
இடைமலையாறு அணையில் இருந்து வினாடிக்கு 1,763 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், பெரும்பாலான அணைகள் வேகமாக நிரம்பின. இதுவரை அங்கு 26 அணைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் எண்ணக்கல் என்ற இடத்தில் அமைந்துள்ள இடைமலையாறு அணை தற்போது திறக்கப்பட்டுள்ளது. அணையின் இரண்டு ஷட்டர்களும் திறக்கப்பட்டு, வினாடிக்கு 1,763 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதையடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.