< Back
தேசிய செய்திகள்
உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியால் மட்டுமே பாஜகவை தோற்கடிக்க முடியும்- அகிலேஷ் யாதவ்

Image Courtesy: PTI  

தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியால் மட்டுமே பாஜகவை தோற்கடிக்க முடியும்- அகிலேஷ் யாதவ்

தினத்தந்தி
|
28 Sept 2022 8:04 PM IST

ஆளும் பாஜக உத்தரபிரதேசத்தில் அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்துவிட்டதாக அகிலேஷ் யாதவ் கூறினார்.

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் தற்போது யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் அங்கு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று 2-வது முறையாக யோகி ஆதித்யநாத் முதல் மந்திரியாக பதவியேற்று ஆட்சி நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் ஆளும் பாஜகவை சமாஜ்வாதி கட்சியால் மட்டுமே தோற்கடிக்க முடியும் என அந்த கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அகிலேஷ் யாதவ், "2022ல் உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றப் போராடிய அனைவ்ருடனும் சமாஜ்வாதி கட்சி கூட்டணி அமைத்தது. ஆனால் எங்களால் வெற்றி பெற முடியவில்லை.

நாங்கள் வெற்றி பெறவில்லை என்றாலும் எங்கள் கட்சி தலைவர்கள் மற்றும் தொழிலாளர்கள் பணியாற்றிய விதத்தின் மூலம் மாநிலத்தில் பாஜகவை எதிர்த்துப் போட்டியிட்டு அவர்களை வீழ்த்த சமாஜ்வாதி கட்சியால் மட்டுமே முடியும் என்பது எங்களுக்கு தெரிந்துவிட்டது.

ஆளும் பாஜக அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்துவிட்டது. சமூகத்தை பிளவுபடுத்தும் சக்திகளை அகற்ற நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம். எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்ததும் மக்களின் முன்னேற்றத்திற்காக செயல்படும்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்