'மக்களின் இதயங்களில் மோடி மட்டுமே இருக்கிறார்' - அமித்ஷா
|அரசியல் செயல்திறன் அடிப்படையில் புதிய இந்தியா வாக்களிக்கிறது என்று அமித்ஷா கூறியுள்ளார்.
புதுடெல்லி,
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.க. அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அதே சமயம் தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது.
இந்நிலையில், மக்களின் இதயங்களில் பிரதமர் மோடி மட்டுமே இருக்கிறார் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;-
"மக்களின் இதயங்களில் மோடி மட்டுமே இருக்கிறார். சாதி அடிப்படையிலான அரசியல் முடிந்துவிட்டது என்பதை இன்றைய தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன. அரசியல் செயல்திறன் அடிப்படையில் புதிய இந்தியா வாக்களிக்கிறது.
மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் மற்றும் ராஜஸ்தான் மக்களின் மகத்தான ஆதரவிற்காக நான் தலை வணங்குகிறேன். பா.ஜ.க.வின் இந்த மாபெரும் வெற்றிக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள்."
இவ்வாறு அமித்ஷா பதிவிட்டுள்ளார்.