< Back
தேசிய செய்திகள்
உ.பி.: மூதாட்டிகளை கொலை செய்து, உடலுடன் உறவு... சைக்கோ சீரியல் கில்லர் கைது
தேசிய செய்திகள்

உ.பி.: மூதாட்டிகளை கொலை செய்து, உடலுடன் உறவு... சைக்கோ சீரியல் கில்லர் கைது

தினத்தந்தி
|
23 March 2023 6:48 PM IST

உத்தர பிரதேசத்தில் மூதாட்டிகளை குறிவைத்து, கொலை செய்து, உடலுடன் உறவு கொண்ட சைக்கோ சீரியல் கில்லரை போலீசார் கைது செய்து உள்ளனர்.



பாராபங்கி,


உத்தர பிரதேசத்தின் பாராபங்கி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தும் வகையில், தொடர் சம்பவங்கள் நடந்தன. அந்த கிராமத்தில் மூதாட்டிகளை குறிவைத்து கொலை செய்து, பின்னர் பாலியல் வன்கொடுமை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து காணப்பட்டன.

இதுபற்றி 6 தனிப்படைகள் அமைத்து போலீசார், குற்றவாளியை தேடி வந்தனர். அந்த மர்ம நபரின் புகைப்படம் ஒன்றை சமூக ஊடகத்தில் வெளியிட்டு தகவல் தெரிந்தவர்கள் போலீசிடம் தெரிவிக்கலாம் என கேட்டு கொள்ளப்பட்டது.

மொத்தம் 3 படுகொலைகள் நடந்த நிலையில், வழக்கின் விசாரணை அதிகாரியை நீக்கி விட்டு, வேறொரு அதிகாரி ஒருவரை பாராபங்கி எஸ்.பி. நியமித்து உள்ளார்.

இதன்படி, கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி அயோத்தியா மாவட்டத்தில் குஷெட்டி கிராமத்தில் மாவாய் பகுதியை சேர்ந்த 60 வயதுடைய மூதாட்டி, வீட்டை விட்டு ஏதோ ஒரு வேலைக்காக வெளியே சென்றுள்ளார்.

அன்று மாலை வரை அவர் வீடு திரும்பவில்லை. இதனால், அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். போலீசில், காணவில்லை என புகார் அளித்தனர். அதற்கடுத்த நாள் வயல்வெளியில் ஒதுக்குப்புறத்தில் பெண்ணின் உடல் ஒன்றை போலீசார் மீட்டனர். நிர்வாண நிலையில் கிடந்த அந்த உடலில் தலை மற்றும் முகம் ஆகிய பகுதிகளில் காயங்கள் காணப்பட்டு உள்ளன.

இதுபற்றிய பிரேத பரிசோதனை முடிவில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்து நெரித்து அந்த பெண் கொல்லப்பட்டது தெரிய வந்தது.

இதேபோன்று, பாராபங்கி மாவட்டத்தில் வயல்வெளி ஒன்றில் இருந்து 62 வயது பெண்ணின் உடல் ஒன்றையும் போலீசார் மீட்டனர். இந்த 2-வது சம்பவத்திலும் அதேபோன்று மூதாட்டி படுகொலை செய்யப்பட்டு உள்ளார். அந்த பெண்ணின் உடல் ஆடைகளின்றி காணப்பட்டது. பிரேத பரிசோதனையில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்து நெரித்து கொல்லப்பட்டது தெரிய வந்தது.

கடந்த ஆண்டு டிசம்பர் 30-ந்தேதி தாத்தர்ஹா கிராமத்தில் 55 வயது மூதாட்டி ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரும் இதேபோன்று கொல்லப்பட்டு உள்ளார்.

இதனை தொடர்ந்து, பாராபங்கி மற்றும் அருகேயுள்ள காவல் நிலையங்களில் உள்ள போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். தொடர்ந்து வேறு சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதனால், பாராபங்கி மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் ஒவ்வொரு நாள் இரவிலும், அச்சத்துடனேயே காணப்பட்டனர்.

இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் ஹுன்ஹுனா கிராமத்தில் மூதாட்டி ஒருவரை கடந்த ஜனவரி 23-ந்தேதி கொலை செய்ய 2 பேர் முயற்சித்து உள்ளனர். இதனால், அவர் கத்தி, கூச்சலிட்டு உள்ளார். அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த கிராம மக்கள் அமரேந்தர் என்பவரை பிடித்து கொண்டனர். ஆனால், அவரது கூட்டாளியான சுரீந்தர் என்பவர் தப்பி விட்டார்.

அமரேந்தருக்கு எதிராக 3 வழக்குகள் பதிவாகின. இந்த நிலையில், ராம்சனேஹி காட் நகரில் தயாராம் பூர்வா என்ற பகுதியை சேர்ந்த அமரேந்தரின் கூட்டாளியான சுரேந்தர் என்பவரை போலீசார் நேற்று மாலை கைது செய்து உள்ளனர்.

அவரிடம் நடந்த விசாரணையில், மேற்குறிப்பிட்ட தொடர் கொலைகளில் அவர்களுக்கு உள்ள தொடர்பு தெரிய வந்து உள்ளது. இதன்படி, தனியாக வரும் மூதாட்டியை கொலை செய்து, அதன்பின்பு அந்த உடலுடன் பாலியல் உறவு கொள்ளும் வழக்கம் இருந்து உள்ளது.

இந்த மூதாட்டியை அவர்கள் கொல்ல முயன்றபோது, அவர்களில் ஒருவர் பிடிபட்டனர். சீரியல் கில்லர்களில் ஒருவரான மீதமிருந்த சுரேந்தரையும் போலீசார் கைது செய்து உள்ளனர்.

அவர்கள் இருவரும் அரிசி அரவை மில்லில் ஒன்றாக பணியாற்றி வந்து உள்ளனர். அவர்கள் ஒன்றாக ஆபாச வீடியோக்களை பார்ப்பது வழக்கம் என போலீசாரின் விசாரணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்