உத்தர பிரதேசத்தில் சட்டசபையில் ஆன்லைன் ரம்மி, புகையிலை... பா.ஜ.க. எம்.எல்.ஏக்களின் செயலுக்கு சமாஜ்வாடி கண்டனம்
|பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் செயல் சட்டசபையின் மாண்பை குறைக்கும் வகையில் அமைந்துள்ளதாக சமாஜ்வாடி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
லக்னோ,
உத்தர பிரதேச மாநில சட்டசபையில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்றது. சபை நடவடிக்கையின் போது, மகோவா தொகுதியின் பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராகேஷ் கோஸ்வாமி, தனது மொபைலில் ஆன்லைன் ரம்மி விளையாடிக் கொண்டிருந்தார்.
அதே போல் ஜான்சி தொகுதியின் பா.ஜ.க. எம்.எல்.ஏ. ரவி சர்மா, தனது கையில் புகையிலையை கொட்டி வாயில் போட்டு மென்று கொண்டிருந்தார். இந்த இரண்டு வீடியோ காட்சிகளையும் சமாஜ்வாடி கட்சி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் இந்த செயல், சட்டசபையின் மாண்பை குறைக்கும் வகையில் அமைந்துள்ளது என்றும் இவர்களுக்கு மக்கள் பிரச்சினைகளில் கவனம் இல்லை என்றும் சமாஜ்வாடி கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
सदन की गरिमा को तार-तार कर रहे भाजपा विधायक!
महोबा से भाजपा विधायक सदन में मोबाइल गेम खेल रहे, झांसी से भाजपा विधायक तंबाकू खा रहे।
इन लोगों के पास जनता के मुद्दों के जवाब हैं नहीं और सदन को मनोरंजन का अड्डा बना रहे।
बेहद निंदनीय एवं शर्मनाक ! pic.twitter.com/j699IxTFkp