< Back
தேசிய செய்திகள்
மே.வங்கத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை: முதல் மந்திரி உத்தரவு
தேசிய செய்திகள்

மே.வங்கத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை: முதல் மந்திரி உத்தரவு

தினத்தந்தி
|
16 April 2023 2:11 PM IST

கடுமையான வெப்பம் காரணமாக மேற்கு வங்கத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா,

இந்தியாவில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் கடும் வெப்ப அலை வீசுகிறது. கடுமையான வெப்பம் காரணமாக மாநிலத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வரும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒரு வாரத்திற்கு கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்