< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஜனநாயக நாட்டில் ஒரே நாடு ஒரே தேர்தலை அமல்படுத்த முடியாது - மல்லிகார்ஜுன கார்கே
|18 Sept 2024 5:54 PM IST
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு மாறானது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
புதுடெல்லி,
ஒரே நாடு ஒரே தேர்தல் ' திட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. இந்தநிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம். நடைமுறைக்கு மாறானது. ஜனநாயக நாட்டில் ஒரே நாடு ஒரே தேர்தலை அமல்படுத்த முடியாது. ஜனநாயகம் நிலைத்திருக்க வேண்டுமெனில் தேவைக்கேற்ப தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்றார்.