< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு..!
|2 Aug 2022 1:57 PM IST
கேரளாவில் இதுவரை குரங்கு அம்மை நோய் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
திருவனந்தபுரம்,
வளைகுடா நாட்டில் இருந்து கேரளா வந்த 35 வயது நபருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலும் ஒருவருக்கும் இதே பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில் இன்று மலப்புரம் பகுதியை சேர்ந்த 30 வயதான நபருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இவர் கடந்த 27-ந் தேதி வளைகுடா நாட்டில் இருந்து கேரளா வந்தார். அவருக்கு லேசான காய்ச்சலும், கொப்பளங்களும் இருந்ததால் அவரது ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டன.
இதன் முடிவுகள் இன்று வந்தது. இதில் அவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது உறுதியானது. இவரையும் சேர்த்து கேரளாவில் இதுவரை குரங்கு அம்மை நோய் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.