மதுபான ஊழல் வழக்கில் மேலும் ஒரு தொழிலதிபர் கைது - அமலாக்கத்துறை அதிரடி
|மதுபான ஊழல் வழக்கில் மேலும் ஒரு தொழிலதிபரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
புதுடெல்லி,
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. விசாரணைக்குப் பிறகு அவரை மார்ச் 20ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கைது நடவடிக்கையைத் தொடர்ந்து சிசோடியா தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த விவகாரம் டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், மதுபான கொள்கை ஊழல் முறைகேடு விவகாரத்தில் ஐதராபாத்தைச் சேர்ந்த மேலும் ஒரு மதுபான தொழிலதிபர் அருண் ராம்சந்திர பிள்ளை என்பரை அமலாக்கத்துறையினர் இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
ராபின் டிஸ்டில்லரீஸ் எல்.எல்.பி என்ற நிறுவனத்தில் அருண் ராம்சந்திர பிள்ளை ஒரு பங்குதாரராகவும் இருந்தவர். அவர் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கே கவிதா மற்றும் பிறருடன் தொடர்புடைய 'தெற்கு குழு'மதுபானக் கார்டலை பிரதிநிதித்துவப்படுத்தியதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளன.