< Back
தேசிய செய்திகள்
பா.ஜனதா நலத்திட்ட உதவி மாநாடு மூலம் ஒரு லட்சம் பேர் பயனடைந்தனர்
தேசிய செய்திகள்

பா.ஜனதா நலத்திட்ட உதவி மாநாடு மூலம் ஒரு லட்சம் பேர் பயனடைந்தனர்

தினத்தந்தி
|
20 March 2023 10:00 AM IST

பா.ஜனதா நலத்திட்ட உதவி மாநாட்டின் மூலம் ஒரு லட்சம் பேர் பயனடைந்துள்ளதாக மந்திரி பைரதி பசவராஜ் கூறியுள்ளார்.

சிக்கமகளூரு-

பா.ஜனதா நலத்திட்ட உதவி மாநாட்டின் மூலம் ஒரு லட்சம் பேர் பயனடைந்துள்ளதாக மந்திரி பைரதி பசவராஜ் கூறியுள்ளார்.

நலத்திட்ட உதவி

சிக்கமகளூரு அருகே உள்ள தேகூர் கிராமத்தில் பா.ஜனதா சார்பில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுக்கான நலத்திட்டங்கள் பயனாளிகளுக்கு வழங்கும் மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டை மந்திரி பைரதி பசவராஜ், சிக்கமகளூரு தொகுதி எம்.எல்.ஏ. சி.டி.ரவி ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இந்த மாநாட்டில் மந்திரி பைரதி பசவராஜ் பேசியதாவது:-

சிக்கமகளூரு தொகுதியில் எம்.எல்.ஏ. சி.டி.ரவி, பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை செய்துள்ளார். இதற்கு சிக்கமகளூரு அரசு மருத்துவ கல்லூரி மருத்துமனை மற்றும் அதி நவீன வசதியுடன் கூடிய அரசு ஆஸ்பத்திரி ஒரு உதாரணம். இந்த ஆஸ்பத்திரிகளால், இனி சிக்கமகளூரு மக்கள் வெளி மாவட்டங்களுக்கு செல்ல தேவையில்லை. இங்கே அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை பெற்று கொள்ளலாம். அதன் அளவிற்கு வசதிகள் உள்ளது.

இந்த மாநாடு மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் நேரடியாக மக்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்டுள்ளது. இந்த நல திட்ட உதவிகளுக்காக ரூ.3700 கோடி ஒதுக்கப்பட்டது. இதன் மூலம் 14 துறைகளின் கீழ் ஒரு லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.3700 கோடி நிதி

இதை தொடர்ந்து பேசிய சி.டி.ரவி எம்.எல்.ஏ கூறியதாவது:- சிக்கமகளூருவில் ரூ. 650 கோடி செலவில் மருத்துவ கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரிகள் கட்டப்பட்டு வருகிறது. இந்த மருத்துவ கல்லூரி எதிர்கால சந்ததிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். அனைத்து நோய்களுக்கு இங்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படும். இதனை மக்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும்.அடுத்த மாதம் 22-ந் தேதி ரம்ஜான் பண்டிகை நடக்கிறது. வருகிற 22-ந் தேதி யுகாதி பண்டிகை நடக்கிறது. இந்த பண்டிகையில் எந்தவிதமான இடையூறும் ஏற்பட கூடாது. பா.ஜனதா நடத்தப்பட்டுள்ள இந்த மாநாட்டின் மூலம் 1 லட்சம் பேர் பயனடைந்துள்ளது. ரூ.3700 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மக்களை சென்றடைந்துள்ளது. பா.ஜனதா ஆட்சியில் ஊழல் நடப்பதாக சிலர் குற்றம் சாட்டுகின்றனர். அதில் உண்மை இல்லை. வதந்திகளை பரப்புகின்றனர். இதனை மக்கள் நம்ப கூடாது.

கண்டு கொள்வது இல்லை

என் மீதான குற்றச்சாட்டிற்கு நான் பதில் கூற விரும்பவில்லை. எதிர்கட்சிகள் திட்டமிட்டு குற்றம் சாட்டுகிறது. இதை நான் கண்டு கொள்ளவில்ைல. மக்கள் பணியே எங்கள் இலக்கு. வரும் நாட்கள் மக்கள் பா.ஜனதா கட்சிக்கு ஆதரவு அளிக்கவேண்டும். சட்டசபை தேர்தலில் வெற்றி பெற பா.ஜனதாவுடன் கைகோர்க்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்