< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
சிம்லாவில் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.! பலர் படுகாயம்
|18 July 2023 11:14 PM IST
சிம்லாவில் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
சிம்லா,
இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவின் மையப்பகுதியில் மால் சாலையில் உள்ள உணவு விடுதியில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
விபத்தின் தீவிரத்தால், அருகில் உள்ள பல கடைகள் மற்றும் வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து பல கிலோ மீட்டர் தூரம் வரை சத்தம் கேட்டது. நான்கு முதல் ஆறு கடைகள் சேதமடைந்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 10 பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வெடிப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பு உணவு விடுதியில் எரிவாயு சிலிண்டர் கசிவு ஏற்பட்டதாகவும், சிலிண்டர் வெடித்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.