< Back
தேசிய செய்திகள்
டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தின் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலி
தேசிய செய்திகள்

டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தின் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலி

தினத்தந்தி
|
8 Feb 2024 3:03 PM IST

இந்த விபத்தில் காயமடைந்த 4 பேரை மீட்டு போலீசார் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

புதுடெல்லி,

வடகிழக்கு டெல்லியில் உள்ள கோகுல்புரி மெட்ரோ ரெயில் நிலையத்தின் எல்லை சுவரின் ஒரு பகுதி இன்று காலை 11.10 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. இந்த கோர விபத்தில் ஒருவர் பலியானார். மேலும் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு போலீசார் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் போலீசாரின் முதற்கட்ட அறிக்கையில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 3 முதல் 4 இருசக்கர வாகனங்கள் இந்த இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகள்