< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பீகார்: கங்கை நதியில் படகு கவிழ்ந்து விபத்து - பெண் ஒருவர் பலி
|15 Aug 2022 12:23 AM IST
பீகார் மாநிலம் கங்கை ஆற்றில் பலத்த காற்று காரணமாக பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
பாகல்பூர்,
பீகார் மாநிலம் பாகல்பூர் கங்கை ஆற்றில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று பலத்த காற்று காரணமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
கங்கை ஆற்றில் பயணிகளை ஏற்றிச் சென்ற பெரிய படகு ஒன்று பலத்த காற்றின் காரணமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து 8 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். மேலும் ஒரு பெண் உயிரிழந்தார்.
உள்ளூர் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்த மாநில பேரிடர் மீட்புப் படையினர் தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மீட்புக்குழு இதுவரை ஏழு பேரை காப்பாற்றியுள்ளனர். தொடர்ந்து தேடுதல் பணி நடந்து வருகிறது.