< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
வங்காளதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்து: ஒருவர் பலி
|14 Dec 2023 3:22 AM IST
5 ரெயில் பெட்டிகள் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் சிக்கி ஒருவர் பலியானார். பலர் படுகாயம் அடைந்தனர்.
டாக்கா,
வங்காளதேசத்தின் மைமென்சிங் நகர் ரெயில் நிலையத்தில் இருந்து தலைநகர் டாக்கா நோக்கி மோகங்கஞ்ச் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது. அதிகாலை 4 மணி அளவில் காசிபூர் அருகே எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அந்த ரெயில் தடம்புரண்டு விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் 5 ரெயில் பெட்டிகள் தலைகுப்புற கவிழ்ந்தன. இந்த விபத்தில் ஒருவர் பலியானார். பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விசாரணையில் விபத்திற்குள்ளான ரெயில் சென்ற தண்டவாளத்தை மர்ம நபர்கள் சிலர் சேதப்படுத்தியதால் இந்த விபத்து நேர்ந்ததாக கூறப்படுகிறது.