< Back
தேசிய செய்திகள்
ஓணம், புரட்டாசி பூஜை - சபரிமலையில் தொடங்கியது  ஆன்லைன் முன்பதிவு
தேசிய செய்திகள்

ஓணம், புரட்டாசி பூஜை - சபரிமலையில் தொடங்கியது ஆன்லைன் முன்பதிவு

தினத்தந்தி
|
27 Aug 2022 8:02 AM IST

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை மற்றும் புரட்டாசி மாத பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது.

திருவனந்தபுரம்,

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. இதேபோல் புரட்டாசி மாத பூஜைக்காக செப்டம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டு 21 ஆம் தேதி வரை பூஜைகள் நடைபெற உள்ளன.

இந்த நாட்களில் பக்தர்கள் தரிசனத்திற்காக ஆன்லைன் முன்பதிவு தொடங்கப்பட்டு உள்ளது. முன்பதிவு செய்யாத பக்தர்களுக்கு பம்பையில் உடனடி முன்பதிவு செய்ய தேவசம்போர்டு ஏற்பாடு செய்துள்ளது.

மேலும் செய்திகள்