ஓணம் பண்டிகை: கேரள அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு
|ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என அம்மாநில நிதியமைச்சர் கே.என். பாலகோபால் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கேரள அரசு ஊழியர்கள் அனைவருக்கும் 4000 ரூபாய் ஓணம் பண்டிகை போனசாக வழங்கப்படும். போனஸ் பெறத் தகுதி பெறாத அரசு ஊழியர்களுக்கு 2750 ரூபாய் ஓணம் பண்டிகை சிறப்பு அலவன்ஸ் வழங்கப்படும். இதன் மூலம் சுமார் 13 லட்சம் அரசு ஊழியர்கள் பயனடைவார்கள்.
அதேபோல், ஓய்வூதியதாரர்களுக்கு ஓணம் சிறப்புப் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களது ஊதியத்திலிருந்து சுமார் 20000 ரூபாயை பண்டிகைக் கால முன்பணமாக பெற்றுக் கொள்லலாம். பகுதி நேர மற்றும் தற்காலிக ஊழியர்கள் 6000 ரூபாயை முன்பணமாக பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.