< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
இரட்டை இலை சின்னம் எந்த அடிப்படையில் அ.தி.மு.க.வுக்கு ஒதுக்கீடு..? தேர்தல் கமிஷன் பதில்
|14 May 2024 2:26 AM IST
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், இ.பி.எஸ். தரப்புக்கு இரட்டை இலை ஒதுக்கியது எப்படி? என தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
புதுடெல்லி,
அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு, நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தின் ஒதுக்கீடு தொடர்பான சில கேள்விகளை ஓசூரைச் சேர்ந்த பி.ஜெயசிம்மன் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தேர்தல் கமிஷனிடம் கேட்டு இருந்தார் அதற்கு தேர்தல் கமிஷன் அளித்த பதிலில், 'இந்த தகவல்கள் எல்லாம் தேர்தல் கமிஷனின் 20-4-2023 கடிதத்தில் கிடைக்கும்' என்று கூறப்பட்டதுடன் சம்பந்தப்பட்ட கோர்ட்டு உத்தரவுகளும் அளிக்கப்பட்டு உள்ளது.
தேர்தல் கமிஷனின் 20-4-2023 அன்றைய கடிதம், 'கட்சியின் திருத்தப்பட்ட விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் அனைத்தும் கோர்ட்டு உத்தரவுக்கு உட்பட்டு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பப்பட்ட கடிதம்' என்பது குறிப்பிடத்தக்கது.