< Back
தேசிய செய்திகள்
சாலையில், பெண் தவறவிட்ட செல்போனை ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்
தேசிய செய்திகள்

சாலையில், பெண் தவறவிட்ட செல்போனை ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்

தினத்தந்தி
|
26 Aug 2022 8:38 PM IST

எல்லாப்புராவில், சாலையில், பெண் தவறவிட்ட செல்போனை ஒப்படைத்த ஆட்டோ டிரைவருக்கு பாராட்டுகள் குவிகிறது.

மங்களூரு;


உத்தர கன்னடா மாவட்டம் எல்லாப்புரா டவுன் பகுதியை சேர்ந்தவர் மல்லம்மா. இவர், கடந்த 24-ந்ேததி தனது ஸ்கூட்டரில் வேலை விஷயமாக இந்துரா என்ற கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது தீபெத் பயிற்சி மைதானம் பகுதியில் சென்றபோது மல்லம்மாவின் செல்போன் தவறி சாலையில் விழுந்துள்ளது.

இதனை கவனிக்காமல் மல்லம்மா, ஸ்கூட்டரில் சென்றுவிட்டார். அப்போது அதே சாலையில் செய்யது நெலகுரு என்பவர் தன் ஆட்டோவில் சென்றபோது சாலையில் கிடந்த செல்போனை பார்த்து எடுத்துள்ளார். இதற்கிடையே மல்லம்மா வீட்டிற்கு சென்று செல்போனை தேடிபாா்த்த போது கிடைக்கவில்லை.

இதையடுத்து அவர் தனது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது எதிர்முனையில் பேசிய செய்யது நெலகுரு, மல்லம்மாவிடம் தன்னிடம் தான் உங்களது செல்போன் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

பின்னர் மல்லம்மாவின் வீட்டு முகவரியை தெரிந்துகொண்டு அங்கு சென்று செய்யது நெலகுரு, மல்லம்மாவிடம் அவரது செல்போனை ஒப்படைத்தார். அதன்படி மல்லம்மா செல்போனை பெற்றுக்கொண்டு அவருக்கு நன்றி தெரிவித்தார். இதையறிந்த பலரும், செய்யது நெலகுருவின் நேர்மையை பாராட்டினர்.

மேலும் செய்திகள்