< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
'வெள்ளையனே வெளியேறு' இயக்க நினைவு தினம்: எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு
|10 Aug 2023 12:12 AM IST
வெள்ளையனே வெளியேறு இயக்க நினைவு தினத்தையொட்டி எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டியுள்ளார்.
புதுடெல்லி,
சுதந்திர போராட்ட காலத்தில் தொடங்கப்பட்ட இயக்கமான வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி எதிர்க்கட்சிகளை பிரதமர் மோடி கடுமையாக குறை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற தலைவர்களுக்கு அஞ்சலி. இந்தியாவை காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுவிப்பதற்கு காந்திஜியின் தலைமையில் இந்த பெரும் பங்காற்றியது' என குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் அவர், 'இன்றும் இந்தியா, ஊழலே வெளியேறு, குடும்ப அரசியலே வெளியேறு, திருப்திபடுத்தும் அரசியலே வெளியேறு என ஒரே குரலாய் ஒலிக்கிறது' என்றும் எதிர்க்கட்சிகளை மறைமுகமாக கூறியிருந்தார்.