சுகேஷ் சந்திரசேகர சிறை அறையில் ஆடம்பர பொருட்கள்; கதறி அழுதார்
|தற்போது வைரலாகியுள்ள ஒரு வீடியோவில், சுகேஷ் சந்திரசேகர் ஜெயிலர் தீபக் சர்மா மற்றும் ஜெய்சிங் முன்னிலையில் கதறி அழுவதைக் காணலாம்.
புதுடெல்லி
தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்ட வழக்கு, தொழில் அதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி பணம் பறித்த வழக்கு உள்ளிட்ட பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கியவர் சுகேஷ் சந்திரசேகர். இவரும், இவருடைய மனைவி லீனா பவுலோசும் தற்போது டெல்லி மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
தற்போது சுகேஷ் சந்திரசேகரின் மண்டோலி சிறை அறையில் ஆடம்பர பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
சிறை அதிகாரிகள் சுகேஷின் அறையில் சோத்னை நடத்திய போது இரண்டு ஜோடி பேன்ட், குஸ்ஸி ஷூக்கள் கிடைத்தன. பேன்ட் மற்றும் ஷூவின் விலை சுமார் ரூ.1.5 லட்சம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது வைரலாகியுள்ள ஒரு வீடியோவில், சுகேஷ் சந்திரசேகர் ஜெயிலர் தீபக் சர்மா மற்றும் ஜெய்சிங் முன்னிலையில் கதறி அழுவதைக் காணலாம்.
சிறைச்சாலையின் சிசிடிவி வீடியோவில் சுகேஷ் அழுதுகொண்டிருப்பதை பார்க்க முடிகிறது இந்த வீடியோ வியாழக்கிழமை பகிரப்பட்டது.