< Back
தேசிய செய்திகள்
போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிளில் இருந்த நாகபாம்பு
தேசிய செய்திகள்

போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிளில் இருந்த நாகபாம்பு

தினத்தந்தி
|
8 Oct 2022 12:30 AM IST

ஆதடியில் போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிளில் இருந்த நாகபாம்பு பிடிப்பட்டது.

சிக்கமகளூரு;


தாவணகெரே மாவட்டம் ஆதடி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் ஒருவர், தனது மோட்டார் சைக்கிளை போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தியிருந்தார். பின்னா் வேலை முடித்து வீட்டிற்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளை எடுக்க வந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளின் இருக்கைக்கு அடியில் நாகபாம்பு ஒன்று இருந்துள்ளது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக பாம்பு பிடி வீரரான பிரகாஷ் என்பவருக்கு தகவல் கொடுத்தார். அந்த தகவலின் பேரில் பிரகாஷ் போலீஸ் நிலையத்திற்கு விரைந்து வந்தார்.

பின்னர் மோட்டார் சைக்கிளின் இருக்கையை கழற்றி அதில் பதுங்கி இருந்த நாகபாம்பை லாவகமாக பிடித்தார். பின்னர் அதனை ஒரு பையில் போட்டு எடுத்து சென்று அருகில் இருந்த வனப்பகுதியில் விட்டார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்