< Back
தேசிய செய்திகள்
தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயக்குவதை தடுக்க கூடாது - சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால உத்தரவு
தேசிய செய்திகள்

'தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயக்குவதை தடுக்க கூடாது' - சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால உத்தரவு

தினத்தந்தி
|
25 Jun 2024 9:10 PM IST

தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயக்குவதை தடுக்க கூடாது என சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் இயக்கப்படும் அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்ற ஆம்னி பஸ்களை தமிழகத்தில் மறுபதிவு செய்வதற்கு போக்குவரத்து துறை அறிவுறுத்தி இருந்தது. இதற்காக பஸ் உரிமையாளர்களுக்கு ஏற்கெனவே 3 முறை அவகாசம் வழங்கப்பட்டது.

இதையடுத்து கடந்த 14-ந்தேதி முதல் உரிய தமிழக பதிவு எண் மற்றும் அனுமதிச் சீட்டு பெறாமல் இயக்கப்படும் ஆம்னி பஸ்களை தமிழகத்தில் இயக்க போக்குவரத்துத்துறை தடை விதித்தது. இந்நிலையில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தொடர்பான தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் உத்தரவால் வெளிமாநில ஆம்னி பஸ்களின் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயக்குவதை தடுக்க கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த ரிட் மனு தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்கவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


மேலும் செய்திகள்