< Back
தேசிய செய்திகள்
புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு உமர் அப்துல்லா வரவேற்பு
தேசிய செய்திகள்

புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு உமர் அப்துல்லா வரவேற்பு

தினத்தந்தி
|
27 May 2023 10:17 AM IST

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை வரவேற்று தேசிய மாநாட்டுக்கட்சியின் துணைத்தலைவர் உமர் அப்துல்லா டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீநகர்,

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை வரவேற்று தேசிய மாநாட்டுக்கட்சியின் துணைத்தலைவர் உமர் அப்துல்லா டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:-

புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு தொடர்பான எதிர்வினைகளை ஒதுக்கித்தள்ளுகிறேன். இந்த கட்டிடம் வரவேற்கத்தக்கது. பழைய நாடாளுமன்றக் கட்டிடம் நன்றாகவே செயலாற்றி இருக்கிறது. ஆனால், அங்கே கடந்த சில ஆண்டுகளாக பணியாற்றியவர்கள் புதிய, மேம்படுத்தப்பட்ட நாடாளுமன்ற கட்டிடத்துக்கான தேவை பற்றி பேசி இருக்கிறார்கள்.ஒரு போதும் இல்லாததைவிட தாமதமாக வருவது சிறப்புதான். புதிய நாடாளுமன்ற கட்டிடம் வசீகரமாக ஈர்க்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது.இவ்வாறு அவர் கூறி உள்ளார். இவரது தேசிய மாநாட்டுக்கட்சி, புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்புவிழாவை புறக்கணிப்பது இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.

மேலும் செய்திகள்