ராஜஸ்தானின் ஜெய்ப்பூரை சென்றடைந்த ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம்
|ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் இந்தியாவின் மேற்கு பகுதியில் முதல் முறையாக நேற்று ஜெய்ப்பூரை சென்றடைந்தது.
ஜெய்ப்பூர்,
சென்னையில் 44-வது செஸ் ஒலிம்பியார் போட்டி வருகின்ற ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்ட் 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி செஸ் ஒலிம்பியாட் முதலாவது ஜோதி ஓட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் கடந்த 19-ந்தேதி தொடங்கி வைத்தார்.
நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, 75 நகரங்களில் இந்த ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் நடைபெறுகிறது. முதற்கட்டமாக வட இந்தியாவில் டெல்லி, காஷ்மீர், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட 20 மாநிலங்களில் கடந்த 10 நாட்களாக ஜோதி ஓட்டம் நடைபெற்றது.
தற்போது ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் இந்தியாவின் மேற்கு பகுதியில் முதல் முறையாக நேற்று ஜெய்ப்பூரை சென்றடைந்தது. தொடர்ந்து அஜ்மீர், அகமதாபாத், வதோதரா, சூரஜ், தண்டி, தாமன், நாக்பூர், புனே, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் இந்தியாவின் கிழக்கு பகுதிக்குள் நுழையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.